Friday, March 29, 2024
Home > செய்திகள் > பலே வெளியுறவுத்துறை..! இந்தியர்களை காப்பாற்ற புது ரூட்..!

பலே வெளியுறவுத்துறை..! இந்தியர்களை காப்பாற்ற புது ரூட்..!

25-2-22/16.47pm

புது டெல்லி : உக்ரைன் ரஷ்யா மோதல் வலுவடைந்து வரும் வேளையில் இந்தியர்கள் 20000த்திற்கும் குறிப்பாக மாணவர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சில மாணவர்கள் தாங்கள் ரயில்நிலையத்தில் உணவின்றி சிக்கித்தவிப்பதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஏர் இந்தியா feb 25 ,26,27 என மூன்று நாட்கள் சிறப்பு விமானத்தை உக்ரைனிலிருந்து இயக்கபோவதாக இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் பலர் முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் சரக்கு விமானங்களை பயன்படுத்த சொல்லி அதற்க்கான அனுமதியையும் பெற்று தந்திருந்தது.

போர் தொடங்கும் சில நாட்களுக்கு முன்னரே விமானங்கள் இயக்கப்படும் இடத்தையும் புறப்படும் நேரத்தையும் அறிவித்திருந்தது. அதையும் அங்கிருந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது காப்பாற்றுங்கள் என குரல்கொடுத்து வருகின்றனர்.

`

ரஷ்யா உக்ரைன் வான்வெளிகள் மூடப்பட்டிருந்தாலும் இன்று தற்போது இந்திய உக்ரைன் தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹங்கேரி வழியாக இந்தியாவுக்கு விமானம் இயக்கப்படுகிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. மேலும் புறப்படும் இடத்தையும் அறிவித்துள்ளது.

இதையாவது அங்கு இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் அங்கு செல்லாத மாதிரியும் இந்தியர்களை காப்பாற்ற அரசு எந்த முயற்சியும் எடுக்காதது போலவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஆப்கான் அகதிகளையே பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவந்த மோடி அரசு எப்படி இந்தியர்களை கைவிடும் என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்களின் சீரிய முயற்சியின் மூலம் இந்தியர்கள் ஹங்கேரி வழியாக இந்தியாவுக்கு வருவார்கள் என தெரிகிறது. மேலும் இந்திய அரசின் முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

……உங்கள் பீமா