Friday, September 22, 2023
Home > செய்திகள் > அம்பேத்கார் ஆசைப்படி சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமா..!? வலுக்கும் கோரிக்கை…!!

அம்பேத்கார் ஆசைப்படி சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமா..!? வலுக்கும் கோரிக்கை…!!

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கான தேசிய மொழி என்று ஒன்று இருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளிலேயே தேசிய மொழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளத்தில் #SaveIndiaMovement என ட்ரெண்டாகி வருகிறது.


அதில் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது அதனால் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் எனவும், அம்பேத்கார் ஆசைப்பட்டது போல சமஸ்கிருதம் தேசியமொழியாக்கப்பட வேண்டும் எனவும், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் மாற்றப்படவேண்டும் எனவும் #SaveIndiaMovement என ஹேஷ்டேக்கிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

`

ஆனால் துளியும் சம்பந்தமே இல்லாமல் அரபு நாட்டை சேர்ந்த ஷாஹித் ஷேக் என்பவர் பிஜேபியை குறிப்பிட்டு தாக்கி எழுதி #SaveIndiaMovement என பதிவிட்டிருக்கிறார். இவரை போன்ற சிலராலேயே மதநல்லிணக்கம் இங்கு பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இந்திய மக்களுக்கும் UAE குடிமகனுக்கும் என்ன தொடர்பு..?? இதுபோன்ற விஷக்கிருமிகளை இந்திய மக்கள் தள்ளியே வைக்கவேண்டும் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

…உங்கள் பீமா