Friday, September 22, 2023
Home > செய்திகள் > மதுரையில் பரபரப்பு..! கட்டிடத்திற்காக கண்மாயை உடைத்த திமுகவினர்..?? கதறி அழும் விவசாயிகள்..!

மதுரையில் பரபரப்பு..! கட்டிடத்திற்காக கண்மாயை உடைத்த திமுகவினர்..?? கதறி அழும் விவசாயிகள்..!

4-12-21/16.25pm

மதுரை : விவசாயம் செய்ய தேக்கி வைத்திருந்த கண்மாய் நீரை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் ஆட்களை வைத்தது இரவோடு இரவாக திறந்து விட்டது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

மதுரை அருகே கூத்தியார் குண்டு எனும் ஊர் உள்ளது. இங்கு விவசாயம் மட்டுமே மூலத்தொழில். இதை நம்பியே 2000 குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் கண்மாயில் விவசாயத்திற்காக நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்மாய் சமீபத்தில் தான் ஒருகோடி செலவில் மராமத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்மாய் அருகில் ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இது ஒரு அரசியல் பிரமுகருக்கு சொந்தம் என சொல்லப்படுகிறது. இந்த கண்மாய் அந்த கட்டிடத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி PWD ஏ.இ யான மோகன் குமார் என்பவரை அணுகியதாக தெரிகிறது. அதையடுத்து மோகன் குமார் இரவோடு இரவாக விவசாயத்திற்கு தேக்கி வைத்திருந்த நிலையூர் கூத்தியார் குண்டு கண்மாய் நீரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டுத்தனமாக திறந்துவிட்டுவிட்டார்.

`

காலையில் கண்மாயை பார்த்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து விவசாயிகள் மதுரையில் போராட்டம் நடத்திவருகின்றனர். மோகன் குமாரை பணி நீக்கம் செய்ய கோரியும் தொடர்புடைய அந்த அரசியல் பிரமுகரைக்கைது செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பிவருகின்றனர்.

இதுகுறித்து பிஜேபி ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் தனது பதிவில் ” நாதியாற்றவர்களா தமிழக விவசாயிகள். இரவோடு இரவாக விவசாயத்திற்கு தேக்கி வைத்திருந்த நிலையூர் கூத்தியார் குண்டு கண்மாய் நீரை திமுகவினர் real estate தொழில் செய்வதற்காக திறந்த விட்ட PWD அதிகாரி. இரு போகம் விளைய வேண்டிய நிலையில் ஒரு போகம் கூட இனி விளையாது என விவசாயிகள் கண்ணீர்” என தெரிவித்துள்ளார்.

….உங்கள் பீமா