தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கோவில்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்தனர். அதில் விளையும் பொருட்கள் வறியவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அந்த நிலங்களிலிருந்து ஈட்டப்படும் வருமானம் கோவில் பராமரிப்புக்கென்றே செலவிடப்பட்டது.
ஆனால் அரசு கைகளுக்குள் கோவில் சென்றவுடன் பல தில்லுமுல்லுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. பல கோவில்களில் சிலைகள் காணாமல் போயின. அதை தொடர்ந்து கோவில் நிலங்களும் மெல்ல மெல்ல காணாமல் போக தொடங்கின. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்சிலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரு ஞிலிவனேஸ்வரர் திருக்கோவில் நிலங்களில் பெரும்பகுதி காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது..
அருள்மிகு திரு ஞிலிவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமாக நஞ்சை நிலம் 15.4 ஏக்கரும், புஞ்சை நிலம் 4515.98 ஏக்கரும், மானாவாரி நிலம் 220.8 ஏக்கரும் இருந்ததாக இந்து அறநிலையத்துறை சார்பில் 30-11- 2015 அன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நஞ்சை நிலம் 12.79 ஏக்கரும் புஞ்சை நிலம் 339.73 ஏக்கரும் உள்ளதாக அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அருள்மிகு திரு ஞிலிவனேஸ்வரர் திருக்கோவிளுக்கு சொந்தமான 4800 ஏக்கரில் தற்போது வெறும் 350 ஏக்கர் மட்டுமே இருப்பதாக சொல்லியிருப்பது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
திராவிட கட்சிகள் இதற்க்கு பதில் சொல்லவேண்டும் என இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
….உங்கள் பீமா