Friday, July 12, 2024
Home > செய்திகள் > கடந்த வருடமே போட்ட திட்டம்..! காட்டிக்கொடுத்த யூ ட்யூப் வீடியோ..! கலைகிறதா பஞ்சாப் அரசு..?

கடந்த வருடமே போட்ட திட்டம்..! காட்டிக்கொடுத்த யூ ட்யூப் வீடியோ..! கலைகிறதா பஞ்சாப் அரசு..?

07-01-22/12.00pm

டெல்லி ; பிரதமர் வாகனம் பஞ்சாப் நுழைந்தபோது போராட்டடக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துமீறி போராட்டக்காரர்கள் நுழைய பஞ்சாப் காங்கிரஸ் அரசு வழிவகை செய்துவிட்டதாக பரவலாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் சாலைவழிப்பயணத்தை போராட்டக்காரர்களுடன் பஞ்சாப் போலீசார் பகிர்ந்துகொண்டதாக போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் தேநீர் அருந்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதாகவும் அதனால் பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்றும் பேட்டியளித்திருந்தார்.

ஆனால் நேற்று இந்தியா டுடே நிருபருடன் காரில் முககவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பேட்டியளித்துக் கொண்டுவந்தார். ஒரு இடத்தில் காரை நிறுத்தி போராட்டக்காரர்களுடன் குசலம் விசாரித்தார். போராட்டக்காரர்களோ அல்லது முதல்வரோ கொரோனாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

`

இந்த சம்பவங்கள் அப்படியே பிரதமர் ராஜீவின் படுகொலையை நினைவுபடுத்துவதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் வருகையில் பல முக்கிய தலைவர்கள் பல காரணங்களை கூறி கூட்டத்திற்கு செல்லாமல் தவிர்த்தனர் என்பது வரலாறு. இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் சில யூ ட்யூப் சேனல்களில் கடந்த வருடமே தற்போது நடந்த சம்பவத்தை விவரித்துள்ளனர் .

அந்த வீடியோவில் பிரதமர் மோடி ஒரு பாலத்தில் காரில் வருகிறார். அவரது பாதுகாவலர்கள் ஓடிவிடுகின்றனர். போராட்டக்காரர்கள் மோடியை விரட்ட அவர் ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறார். ஆய்தங்களுடன் அந்த கும்பல் மோடியை சுற்றி வளைப்பதாக அந்த வீடியோவில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

```
```

இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் இதுகுறித்த உயர்மட்ட விசாரணை வேண்டும் என நடுநிலையாளர்கள் கருது தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் இந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு பிரதமரை நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் கூறுகையில் இதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும் என எச்சரித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை இந்த விசாரணைக்கு நியமித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இத்தாலியிலிருந்து பஞ்சாப் முதல்வர் சரணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

….உங்கள் பீமா