19-1-21/15.30pm
சென்னை : தமிழகத்தில் கருத்து சுதந்திரம் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே என்கிற நிலை நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாரத பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசி ஒரு நிகழ்ச்சி வெளிவந்தது. அதை பிஜேபியினர் வன்மையாக கண்டித்ததோடு அதுகுறித்து காவல்துறையில் புகாரும் அளித்திருந்தனர். ஆனால் ஆளும்கட்சியினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கருத்துசுதந்திரத்தை பிஜேபி பறிக்கப்பார்கிறது. குரல்வளையை நெரிக்கிறது. பயமுறுத்துகிறது என இணையத்தில் பிஜேபியை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவரும் சேகர் என்பவர் சமூகவலைத்தளத்தில் கூறிய கருத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக இணையத்தில் செய்திகள் உலவுகின்றன. காவல் உதவி ஆய்வாளர் சேகர் சமூக வலைதளத்தில் ” தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியில் ஒருவன் 5000 கொடுக்க சொன்னான்.
வந்த பின் அதை காணோம். அதை கேளுங்கடா என்றால் புரியாத ஹிந்தி மொழியில் பேசியதை ஏதோ புரிஞ்ச மாதிரி சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை” என ஒருவர் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். இதையறிந்த மாநகர காவல் ஆணையர் தமிழக அரசுக்கு எதிராக பேசி அவதூறு பரப்பியதாக கூறி சீருடைப்பணியாளர்கள் நடத்தை விதிகளை மீறியதாக உதவி ஆய்வாளர் சேகர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் கருத்து கூறியதாக அல்லது அவதூறு பரப்பியதாக கூறி காவல்துறை அதிகாரி மீதே நடவடிக்கை எடுத்திருப்பது தமிழக அரசின் நேர்மையையும் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக திமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா