Saturday, April 20, 2024
Home > செய்திகள் > சிரிக்க மட்டும்..! டி ரிவால்வர் நிக்கோலஸ் என்ற பெயர் மருவியே திருவள்ளுவராக மாறியதா..?

சிரிக்க மட்டும்..! டி ரிவால்வர் நிக்கோலஸ் என்ற பெயர் மருவியே திருவள்ளுவராக மாறியதா..?

7-11-21 / 9.33am

கடந்த சிலநாட்களாக விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகே திருக்குறளை எழுதினார் என கொளுத்திப் போட்டிருக்கிறார். இதை வைத்து பல நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

“திருவள்ளுவரின் நிஜ பெயர் T. ரிவால்வர் நிக்கோலஸ். அவரது தந்தை பெயர் டேஞ்சன்ட் ஆல்ப்ரெட் நிக்கோலஸ். அவர் உயிருக்கு ஆபத்து வரவே ஜெருசேலமிலிருந்து தப்பித்து இங்கே வந்தார். உயிர்பயத்தில் நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டும் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்துகொண்டும் சுற்றினார்.

தன் பெயரில் உள்ள நிக்கோலஸ் என்பதை மறைத்துவிட்டு டி ரிவால்வர் எனவே கூறிவந்தார். நாளடைவில் டிரிவால்வர் டிர்ருவால்வர் திருவால்வர் திருவல்லர் என அழைக்கப்பட்டு திருவள்ளுவர் என்றானது.” என ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

`

இதே போல இன்னொருவர் எரிவாயுவுக்கு ஒரு காலத்தில் இயேசு என்றுதான் பெயர். அதை இந்துக்கள் கேசு ( கேசவனின் சுருக்கம்) என அழைத்தனர்.அதுவே GAS எனும் ஆங்கில வார்த்தையாக நாளடைவில் மருவியது.” என கிண்டலடித்துள்ளார்.

```
```

மேலும் ஒருவர் திருவள்ளுவருக்கு ஒவ்வொரு தேவாலயங்களிலும் சிலை அமைக்க கோரிக்கை எழுப்பவேண்டும் எனவும் கிண்டலடித்துள்ளார். அதற்கு இன்னொருவர் மாலை திருவள்ளுவர் தேவாலய பிரார்த்தனைக்கு வருவார் அப்போது கேட்கலாம் என பதிலளித்துள்ளார்.

……உங்கள் பீமா