Saturday, June 15, 2024
Home > செய்திகள் > வெளிநாட்டில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியின் மகனா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

வெளிநாட்டில் இருக்கும் இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியின் மகனா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மணிரத்னம்.இவர் 1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் பல்லவி அணு பல்லவி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.இவர் தொடர்ந்து இயக்கிய 4 படங்களும் சரியாக வெற்றி பெறவில்லை. பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய மௌனராகம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து நாயகன், ரோஜா, பாம்பே, தில் சே போன்ற பல படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தார்.இயக்குனர் மணிரத்னம் கடைசியாக இயக்கிய செக்க சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்கி வெளியாக உள்ள பொன்னியில் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

`

மணிரத்னம் 1988 ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்‌. இவர்கள் இருவருக்கும் 1992 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.இவரின் பெயர் நந்தன்.தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.அவர் அவ்வப்போது இந்தியா வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்.இவர்கள் தங்களுடைய மகனை கேமரா வெளிச்சத்தில் காட்டாமலேயே வளர்த்து வருகிறார்கள்.

```
```

சமீபத்தில் இவர் இந்தியா வந்த போது சுஹாசினியுடன் இவர் எடுத்த இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்
வைரல் ஆகி வருகிறது.இவர் பார்பதற்கு ஹீரோவை போல் இருக்கிறார் என பல கருத்துக்கள் வெளியாகி வருகிறது. சுஹாசினியின் மகன் நந்தனின் சமீபத்திய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.