26-2-22/8.57am
இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 17000 இருந்த சந்தை ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 16,200 வரை வீழ்ச்சியை சந்தித்தது. வெள்ளி கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் 410 புள்ளிகள் உயர்ந்து 16, 658 இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தை 1328 புள்ளிகள் உயர்ந்து 55, 858 இல் முடிவடைந்தது.
மறு பக்கம் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை வியாழன் வரை பல மடங்கு உயர்ந்து 2014 பிறகு $103 டாலரை எட்டியது.
வெள்ளி கிழமை உயர்வை பொறுத்த வரை இது தற்காலிகமாக ஒன்று தான் என்று முக்கிய அனலிஸ்டுகள் கருதுகின்றனர்.
இதற்கு போர் ஒரு காரணமாக கருத்தப் பட்டாலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வளர்ச்சியில் சிரத் தன்மை இல்லாத காரணத்தினாலும் பண வீக்கம் அதிகரித்தாலும் கோவிட் காரணமாக ஏற்பட்ட மந்த நிலை போன்ற அம்சங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை 5 மாநில தேர்தல் முடிவுகள் ஆளும் மத்திய அரசுக்கு சாதகமாகவும் ஸ்திரமான அரசு அமையும் பட்சத்தில் மார்ச் மாதம் 10 ஆம் தேதி சந்தையில் முன்னேற்றம் காணப்படும்.
ஆயினும் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். இது சில சலசலப்பை ஏற்படுத்துகிறது. அதே போல முக்கிய கம்பெனிகளின் மற்றும் பேங்கிங் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு மற்றும் ஆண்டு நிதிநிலை முடிவுகள் சாதகமான நிலையில் இல்லை என்றும கூறப்படுகிறது. ஆகையால் சந்தை மீண்டும் 16,200 புள்ளிகளை உடைத்து 15,500 முதல் 15,800 வரை வீழ்ச்சியை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுக்கு இந்த ஆண்டு பல சங்கடங்களையும் பல சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆயினும் மத்திய அரசின் பல நல்ல முடிவுகளால் சந்தை மீண்டும் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு முடிவில் சந்தை 20,000 புள்ளிகள் உயரத்தை அடைய வாய்ப்புள்ளது. நீண்ட கால அடிப்படையில் முதலிடுகளை மேற்கோள்வது நன்மை பயக்கும்.
செளந்தரராஜன் சேதுராமன் நங்கநல்லூர்