24-12-21/13.07pm
ஹைதராபாத் : ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் என்பதற்கு பதிலாக பாக்யாநகர் என அழுத்தமாக கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிஜேபி அரசு மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊடுருவல்காரர்களான மொகலாயர்களால் மாற்றப்பட்ட நகரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு வருகிறது. உத்திரபிரதேசத்தில் ஆரம்பித்த இந்த மாற்றம் அசாம் தொடங்கி கர்நாடகா வரை நிகழ்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய மாநாடு 2022 ஜனவரி மாதம் 5.6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் உயரதிகாரியான சுனில் அம்பேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் என குறிப்பிடாமல் பாக்யாநகர் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஜேபி நட்டா மோகன் பகவத் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த பெயர் மாற்றம் குறித்து பேசிய பிஜேபி எம்பியான தான்வே கூறுகையில் ” ஒவ்வொரு பகுதியின் பெயரும் நம்முடைய வரலாறு கலாச்சாரம் பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். ஊடுருவல்காரர்களின் வரலாற்றையோ ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றையோ பிரதிபலிப்பதாக இருக்க கூடாது.
பாக்யா நகர் மட்டுமல்ல இன்னும் பல பகுதிகளின் வரலாற்றுப் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்” என கூறினார். மேலும் பல பிஜேபி தலைவர்கள் இந்த கருத்தையே முன்வைக்கின்றனர். இஸ்லாமிய தலைவரான ஒவைசி இதற்க்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா