Thursday, June 20, 2024
Home > செய்திகள் > கணவனின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற மனைவி..!

கணவனின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற மனைவி..!

21-1-22/12.47pm

ரேணிகுண்டா : ஆந்திரமாநிலம் திருப்பதி அருகேயுள்ள ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணவனின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்று சரணடைந்தார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா புக்கா தெருவில் வசித்து வருபவர்கள் ரவிச்சந்தர் (55 தோராயமாக) வசுந்தரா(50 தோராயமாக) தம்பதியினர். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார். வசுந்தராவுக்கும் ரவிச்சந்தருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரவிச்சந்தர் ஒரு பிசினெஸ் மென் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 25 ஆண்டுகளாக இருவருக்கும் பரஸ்பர உறவு சுமூகமாக இருந்ததாக அக்கம்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த சிலநாட்களாக இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சிறு சண்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. ரவிச்சந்தர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருப்பதாக வசுந்தரா சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த ரவியுடன் வசுந்தரா வாய்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

`

வாக்குவாதம் முற்றியநிலையில் வசுந்தரா அருகிலிருந்த கத்தியால் கணவரை பலமுறை குத்தி கொன்றதாக தெரிகிறது. பின்னர் கணவரின் தலையை தனியாக துண்டித்தார். வெட்டுப்பட்ட தலையுடன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏறி காவல்நிலையத்திற்கு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். வசுந்தரா நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

```
```

கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என கருதி கணவனின் தலையை துண்டித்துக் கொன்ற சம்பவம் திருப்பதியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

…..உங்கள் பீமா