Monday, December 2, 2024
Home > செய்திகள் > பிஜேபி மஹிளா மோர்ச்சா தலைவிக்கு நேர்ந்த கொடுமை..! அப்துல்லாவை தேடும் காவல்துறை..!

பிஜேபி மஹிளா மோர்ச்சா தலைவிக்கு நேர்ந்த கொடுமை..! அப்துல்லாவை தேடும் காவல்துறை..!

24-12-21/11.33am

மீரட் : சிறுபான்மையின மார்க்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் அழைப்பின் பெயரில் வீட்டிற்கு சென்ற பிஜேபி மஹிளா மோர்ச்சா தலைவிக்கு நேர்ந்த கொடுமை மதக்கலவரத்தை தூண்டும்விதமாக அமைந்துவிட்டதாக மீரட் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிஜேபி மஹிளா மோர்ச்சா மீரட் நகர தலைவியாக இருப்பவர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பவத்திற்கு முதல் நாள் காஷிராம் காலனி ஹாபூர் சாலையில் உள்ள ஒரு சிறுபான்மை மார்க்க பெண்ணின் வீட்டிற்கு அழைப்பின் பெயரில் (21-12-21)சவிதா சென்றார். அங்கு தயாராக இருந்த அந்த பெண் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.

`
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

அதை அருந்திய சவிதா அந்த இடத்திலேயே மயங்கியுள்ளார். பின்னர் தனது காதலனான அப்துல்லா மற்றும் அவனின் கூட்டாளியை வரவழைத்த அந்த பெண் சவிதாவை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியிருக்கிறார். அந்த மிருகங்கள் வேட்டையாடிவிட்டு அருகில் உள்ள பூங்காவில் வீசிச்சென்றுள்ளனர். இரவு முழுவதும் வேதனையில் மயங்கிய நிலையில் கிடந்த சவிதாவை மறுநாள் பூங்கா ஊழியர்கள் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

```
```

அதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் அப்துல்லா மற்றும் அந்த மர்ம மார்க்க பெண் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து தேடிவருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர செயலால் இரு பிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுவதாக மீரட் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா