Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ஜல்லிக்கட்டுக்கு தடையா..? பாய்ந்து வரும் பீட்டா..!

ஜல்லிக்கட்டுக்கு தடையா..? பாய்ந்து வரும் பீட்டா..!

24-12-21/14.44pm

சென்னை : தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு பல தடைகளை தாண்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடித்ததால் பரபரப்பு தொற்றியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..

https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

இஸ்லாமிய மற்றும் கிறித்தவ பண்டிகைகளில் ஒருபோதும் தலையிடாத பீட்டா அமைப்பு இந்துக்களின் பண்டிகைகள் சடங்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் மட்டும் முந்திக்கொண்டு தடை கேட்டு நிற்பதாக பல இந்து அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.

சமீபத்தில் பீட்டா இந்துக்களின் திருமண சடங்கில் குதிரைகள் காயப்படுத்தப்படுவதாகவும் அதனால் அது தடை செய்யப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியிருந்தது. ஆனால் கிறிஸ்துமஸில் பல வான்கோழிகள் கொல்லப்படுவதையும் விலங்குகள் கொல்லப்படுவதையும் ஏன் கேட்க மறுக்கிறது எனவும் கேள்விகள் எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

`

கிறிஸ்துமஸுக்கு கேக் ரெசிபியை வீடியோவாக பதிவிட்ட பீட்டா மரங்கள் வெட்டப்படுவதை கேட்கவில்லையே எனவும் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் பீட்டா இந்திய அமைப்பின் சிஇஓ வான மணிலால் வல்லியத்தே தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளார்.

“தற்போது ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸுடன் நாடே போராடி வருகிறது. இந்த கடுமையான சூழலில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடமளிக்க கூடாது. மருத்துவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கவேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

```
```

இந்துக்களின் கோவில்கள் எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் நீர்நிலை அருகே எழுப்பப்பட்டிருந்தால் மிகவும் கண்டிப்புடன் கோவில்களை தரைமட்டமாக்கும் தமிழக அரசு இந்துக்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை இரும்புக்கரம் கொண்டு தடைசெய்துவிடுமா இல்லை அனுமதிக்குமா என நடுநிலையாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா