Friday, March 6, 2026
Home > செய்திகள் > மாஸ் காட்டும் யோகி..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

மாஸ் காட்டும் யோகி..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

5-5-22/12.00PM

லக்னோ : அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் குறைந்தபட்சமாக ஒரு வேலைவாய்ப்பை வழங்குவது மாநில யோகி அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 2.10,00 தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க யோகி அரசு இலக்கு வைத்துள்ளது.

விவசாயிகளின் வருடாந்திர வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதுடன் அவர்களை தொழில்முனைவோராகவும் மாற்ற உத்திரபிரதேச யோகி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்படும். அரசு செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில்,

” 375 பெரிய உணவுபதப்படுத்தும் அலகுகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பும் விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும். 41,336 உணவுபதப்படுத்தும் அலகுகள் பிரதமமந்திரி முறைப்படுத்தப்பட்ட மைக்ரோ உணவுபதப்படுத்தும் நிறுவனங்களின் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். PMFME திட்டத்தின்கீழ் உணவுத்துறையில் அவர்ளின் பணியை தொடங்க அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்தும் தொழில்கள் தொடங்கலாம். விவசாயிகளின் பயிர்களுக்கு நல்லவிலை கிடைக்கவேண்டுமென்பதே அரசின் நோக்கம். உணவுபதப்படுத்தப்பட்ட பிறகு பயிர்சேதம் ஏற்படவாய்ப்பில்லை.விளைபொருளுக்கு சந்தையில் நல்லவிலையும் கிடைக்கும். பலவேலைவாய்ப்புகளும் உருவாகும். மேலும் விவசாயிகள் தொழில் தொடங்க அரசு உரிய பயிற்சிகளை அளிக்க ஏற்பாடுசெய்து வருகிறது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

….உங்கள் பீமா