Thursday, May 14, 2026
Home > செய்திகள் > கேரளாவில் மீண்டும் பதட்டம்…! ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் படுகொலை..!

கேரளாவில் மீண்டும் பதட்டம்…! ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் படுகொலை..!

16-4-22/16.12PM

கேரளா : கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பிரமுகர்களின் படுகொலை தொடர்ந்து நடைபெறுவது மாநிலத்தில் பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.

கேரளா பாலக்காடு எல்லாபுல்லியில் எஸ் டி பி ஐ படுகொலை செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சுபைர் தனது தந்தை பஷீருடன் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களின் பின்னால் வந்த கார் இடித்து கீழே தள்ளியிருக்கிறது.

பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல் சுபைரை சராமரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த வருடம் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் சஞ்சித்தின் கொலைவழக்கில் தொடர்புடையவர் சுபைர் என கூறப்படுகிறது. இதற்க்கு பழிக்குப்பழியாக ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.ெரிகிறது.

பாலக்காட்டில் கடைநடத்திவருபவர் ஸ்ரீநிவாசன். இன்று வழக்கம்போல கடைக்கு வந்தவரை பின்தொடர்ந்து மூன்று இருசக்கரவாகனங்களில் ஐந்துபேர் வந்ததாக தெரிகிறது. அதில் ஒருவன் வெளியில் இருக்க மற்ற நால்வர் கடைக்குள் புகுந்து ஸ்ரீனிவாசனை 20 முறை சராமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ஸ்ரீனிவாசனின் அபயக்குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருமுன்னர் ஐந்துபேரும் தப்பியோடியுள்ளனர். இதைத்தொடர்ந்து கேரள டிஜிபி அனில்கண்ட் 14 மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க உயரதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் பழிவாங்கல் கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறுவது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

…..உங்கள் பீமா