28-11-21/11.55am
சென்னை : மேற்குலகில் தீர்க்கதரிசி என கூறப்படும் நாஸ்டர்டாமஸின் 2022 பற்றிய குறிப்புகள் தற்போது வெளிவந்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
உலகின் எதிர்காலத்தை கணித்து சொல்வதில் கில்லாடி எனப்பெயர்பெற்ற மேற்குலக நாஸ்டர்டாமஸ் தனது குறிப்பில் 2022 பற்றிய குறிப்புகளை எழுதியிருப்பதாக தற்போது செய்திகள் உலவ ஆரம்பித்துள்ளன. பிரான்ஸ் நாட்டை சேந்த இவர் LES PROPHETIES என்ற தனது நூலில் எதிர்காலம் பற்றிய குறிப்புகளை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
இவர் எழுதிய கவிதை குறிப்புகளில் ஹிட்லரின் எழுச்சி 9/11 இரட்டை கோபுர தாக்குதல் பிரதமர் மோடியின் அரசியல் பயணம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அனைத்தும் தற்செயலாகவோ அல்லது கணிப்பினாலோ நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2022 பற்றிய அவரது குறிப்பு அனைவரையும் பீதியடைய செய்துள்ளது.
2022ல் அடுத்தடுத்து பூமியை விண்கற்கள் தாக்கும் எனவும் இதனால் பெரும் சேதங்கள் ஏற்படும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் பஞ்சம் ஏற்படும் எனவும் அமேரிக்கா பொருளாதார வீழ்ச்சியடையும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் விட உலக மக்களை பீதியடைய செய்யும் அவரது இன்னொரு குறிப்பு அடுத்த நாற்பது வருடங்களுக்கு மழை பெய்யாது எனவும் அதனால் பஞ்சம் ஏற்படும் எனவும் கூறியிருக்கிறார்.
தண்ணீர் பஞ்சத்தால் அணு ஆயுத போர் உருவாகும் சூழல் ஏற்படும். உணவுக்கு பஞ்சம் ஏற்படும். அதனால் மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து சாப்பிடுவர். மக்கள் ஸோம்பியாக மாறுவார்கள். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோக்கள் உலகை தனது கட்டுக்குள் கொண்டுவந்து அவைகளே ஆட்சி செய்யும். மனித இனம் குறைத்துவிடும் என 2022 பற்றிய பயங்கர கவிதைகளை மேற்குலகிற்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் நாஸ்டர்டாமஸ்.
…..உங்கள் பீமா