Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > சென்னையில் பரபரப்பு..! மனைவி டார்ச்சர்..! சமாளிக்க பிஜேபி நிர்வாகி போன புது ரூட்..!

சென்னையில் பரபரப்பு..! மனைவி டார்ச்சர்..! சமாளிக்க பிஜேபி நிர்வாகி போன புது ரூட்..!

16-4-22/13.43PM

சென்னை : தமிழகத்தில் 2026ல் தாமரையை மலரவைத்தே தீரவேண்டும் என பிஜேபி தலைவர் அண்ணாமலை முதல் தொண்டர்கள் வரை கடுமையாக உழைத்துக்கொண்டிருக்க அதே கட்சியில் இருக்கும் சிலரின் முறையற்ற செயலால் கட்சிக்கே அவப்பெயர் வந்து சேர்கிறது.

இந்நிலையில் சென்னை திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிருஷ்ணாநகர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் சதிஷ் குமார். இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பிஜேபி செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டு வாசலில் நின்றிருந்த கார் திடீரென தீபிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து சதிஷ் மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்துவந்த போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த சிசிடிவியில் ஒரு காரில் வந்த ஒரு பெண் மற்றும் ஆண் சதீஷின் காருக்கு தீவைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சதீஷிடம் நடத்திய விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது மனைவி காரை விற்று நகை வாங்கித்தர சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வெறுத்துப்போய் காருக்கு தீவைத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அவரை கைதுசெய்த போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என எழுதி வாங்கி அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

…..உங்கள் பீமா