Saturday, October 5, 2024
Home > செய்திகள் > கொஞ்சம் பாத்து செய்ங்கப்பா- டாக்டர்.ஷர்மிளா..! தடுமாறிய ரங்கராஜ் பாண்டே..!!??

கொஞ்சம் பாத்து செய்ங்கப்பா- டாக்டர்.ஷர்மிளா..! தடுமாறிய ரங்கராஜ் பாண்டே..!!??

24-11-21/5.47am

சென்னை : கொஞ்சம் பார்த்து செய்ங்கப்பா என கூறிய டாக்டர் ஷர்மிளாவின் பதிவில் நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டல் பதிவிட்டு வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வரிவிதிப்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த நிருபர் மத்திய அரசை குறை கூறும் நோக்கத்திலேயே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். மேலும் பேட்டியின் ஆரம்பத்திலேயே அவரை பிஜேபி கட்சிக்காரர் என முத்திரை குத்தினார்.

`

அதற்க்கு பதிலடியாக ஆமா நான் கட்சிக்காரராச்சே எப்படி இதற்கு பதில்சொல்வன் என கூறினார். மேலும் நிருபரின் குதர்க்கமான கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார். முழு பேட்டியில் சிறிய தொகுப்பை மட்டும் பகிர்ந்து “ஐயோ பாவம்…. மனுஷன் ரொம்ப தடுமாருறாரு… என்ன இருந்தாலும் மூத்த பத்திரிக்கையாளர்… கொஞ்சம் பாத்து செய்ங்கப்பா” என விசிக கட்சியை சேர்ந்த டாக்டர் ஷர்மிளா பதிவிட்டுள்ளார்.

```
```

இந்த பதிவில் ஒருவர் “ஆமா டாக்டர் பிரகாஷ் ராஜ் மாதிரி செய்ங்க என பதிவிட்டுள்ளார். மேலும் நீங்க திருமா அண்ணன் தடுமாறுனத நீங்க பாக்கல எனவும் நீ வந்து ஒரு இன்டர்வியூ எடு. இல்லை உன்னை அவர் எடுக்கட்டும். உன் அபார திறமையை நாங்க பார்க்கறோம். மாத்ருபூதம் நினைப்பிலேயே இருக்க கூடாது. எனவும் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

….உங்கள் பீமா