Sunday, December 3, 2023
Home > செய்திகள் > தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சூசகம்…! டென்ஷனான திமுக தலைமை

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சூசகம்…! டென்ஷனான திமுக தலைமை

17-4-22/10.03AM

கன்னியாகுமரி : கன்னியாகுமரி காளிமலை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அங்கு நடைபெற்ற வாழ்த்தரங்கில் சிறப்புரையாற்றினார். அப்போது ஆட்சிமாற்றம் நடக்கும் நாமெல்லாம் தயாராக இருக்கவேண்டும் என கூறினார்.

காளிமலை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை நீட் தேர்வில் வெற்றியடைந்த அரசுப்பள்ளி மாணவமாணவிகள் ரத்ததானம் வழங்கியவர்கள், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள், பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரிய ஆசிரியைகள், இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர்கள், சிறந்த ஆன்மீகத்தை போதிப்பவர்கள் என அனைவருக்கும் விருதுவழங்கி கௌரவித்தார்.

`

அப்போது பேசிய அண்ணாமலை “யாரோ வந்து சட்டமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ இருப்பதை ஆண்டவன் விரும்பவில்லை. நம் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் என அனைவரும் தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆன்மாவை சுத்தப்படுத்திக்கொண்டு அந்த பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கையில் ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது வெகுவிரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும்.

```
```

அந்த களையெடுப்பில் கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் தமிழகத்தில் திமுகவும் அகற்றப்படும். நமது ஆட்சி அமையும்” என உரையாற்றினார். ஆட்சிமாற்றம் குறித்த இந்த பேச்சு அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. உளவுத்துறை மூலம் தகவலறிந்த திமுக தலைமை டென்ஷனாகி போனதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா