Saturday, July 27, 2024
Home > அரசியல் > துணைமுதல்வரை காரிலேயே கொல்ல முயற்சி..!? போராட்டக்காரர்கள் கலவரத்தில் எட்டு பேர் பலி..!

துணைமுதல்வரை காரிலேயே கொல்ல முயற்சி..!? போராட்டக்காரர்கள் கலவரத்தில் எட்டு பேர் பலி..!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி பகுதியில் உள்ள பன்பிர்புர் கிராமத்திற்கு மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா சென்று கொண்டிருந்தார். அவர் வருவதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் துணைமுதல்வரின் வாகனத்தின் மீது தொடர்ந்து விடாமல் கற்கள் செங்கல் என பல ஆயுதங்களை கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.

இதில் டிரைவர் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நிலைதடுமாறிய வாகனம் கூட்டத்தை புகுந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. அதில் மூன்றுபேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டக்காரர்கள் வாகனத்தில் வந்த ட்ரைவர் மற்றும் இருவரை கீழே இழுத்துப் போட்டு கட்டையால் அடித்தனர். மேலும் அங்கு இருந்த பிஜேபி தொண்டர்களை அடித்து சராமரியாக தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் மூன்றுபேர் உயிரிழந்தனர்.

`

இந்த கலவரத்தில் ஈடுபட்ட சிலர் பிரிவினைவாத காலிஸ்தான் ஆதரவு உடை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் துணைமுதலமைச்சர் தினத்தன்று வருவதாயிருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத சூழல்களால் செல்ல இயலவில்லை.. ஷாருக்கான் மகன் கைது நேற்று உலகம் முழுதும் வைரல் ஆகி வந்த நிலையில் அதை திசை திருப்பும் பொருட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என ஊகங்கள் உலவுகிறது.

பிஜேபி தொண்டர்களை போராட்டக்காரார்கள் தாக்கும் வீடியோ வெளிவந்து தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. துணை முதல்வர் வருவது எப்படி போராட்டக்காரர்களுக்கு தெரிந்தது. அப்படி வரும்போது இதனை பேர் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டனர். அவர்கள் கையில் எப்படி கற்கள் ஆயுதங்கள் இருந்தது.

```
```
https://twitter.com/MadrasTelegram/status/1444903160078745603?s=20

தொண்டர்களை அடித்து கொல்ல வேண்டிய அவசியம் என்ன, துணைமுதல்வரை தாக்க துணிந்தது யார் என பல கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர் பன்பிர்புர் கிராம மக்கள்.

…உங்கள் பீமா

#lakhimpur #kheri #uttarpradesh