15-12-21/16.40pm
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்ததில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஆந்திராவே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆந்திராவில் சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சரிவர இல்லை என்றும் அதனாலாயே விபத்துகள் ஆந்திராவில் அதிகம் நடைபெறுகின்றன என்றும் ஆந்திர எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் முக்கியமான நகரங்களில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும் அதற்கான நிதியை ஆந்திர அரசு மதமாற்றத்திற்கு பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
புதிய சாலைகள் போடவில்லை என கூறியும் தற்போதைய சாலைகளின் அவலநிலை குறித்தும் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தனது சொந்த செலவில் பல சாலைகளை சீரமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆந்திர அரசு பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள ஜங்கரெட்டிகூடம் அருகே அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். ஆற்றில் மிதக்கும் பேருந்தில் சிக்கிதவிக்கும் பயணிகளை மீட்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருகிறது.
…..உங்கள் பீமா