25-11-21/5.59am
ராஜஸ்தான் : என்னுடைய தொகுதியில் காத்ரீனா கைப் கன்னத்தை போல சாலைகள் இருக்கிறது என காங்கிரஸ் அமைச்சர் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் அசோக் கெலாட் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்புணர்வுகளும் தலித்துகளின் மீதான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேசிய குற்றப் புலமை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் குற்றச்செயல்களில் முதல் மாநிலமாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் தனது மந்திரி சபையை மாற்றியமைத்தது. இந்த மந்திரி சபையில் ராஜேந்திர சிங் குதா சேர்க்கப்பட்டார். இவர் நேற்று தனது தொகுதியான ஜுன்ஜுனு மாவட்டம் உதய்பூர்வதியில் பொதுமக்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் மந்திரியை பார்த்து கேள்வியெழுப்பினார்.
ராஜஸ்தான் சாலைகள் மிக மோசமாக உள்ளதே என கேள்வியெழுப்பியதற்கு அமைச்சர் ” முன்பு ஹேமா மாலினி கன்னம் போல இருந்தது. இப்போது கத்ரினா கைப் கன்னத்தை போல வழுவழு என இருக்கிறது.” என கூறினார். இதைக்கேட்ட பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஒரு பொறுப்பான மந்திரியின் கண்ணியமற்ற இந்த பேச்சை நெட்டிசன்கள் பலர் கண்டித்து வருகின்றனர். அமைச்சர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமையில் இரு பெண்கள் இருக்கின்றனர் என்பதை மறந்து பெண்களை இழிவுபடுத்திய அமைச்சர் ராஜேந்திர சிங் மீது ப்ரியங்கா நடவடிக்கை எடுப்பாரா என பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
……உங்கள் பீமா