Wednesday, March 19, 2025
Home > அரசியல் > பூத்தை கைப்பற்ற முயற்சியா..! திமுக மாவட்ட செயலாளர் அட்டூழியம்..?

பூத்தை கைப்பற்ற முயற்சியா..! திமுக மாவட்ட செயலாளர் அட்டூழியம்..?

19-2-22/18.00pm

தென்காசி : தமிழக நகர்ப்புற தேர்தலையொட்டி திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாக்குச்சாவடிகள் அருகே கொட்டகை அமைத்து வாக்கு சேகரிப்பதாகவும் பிஜேபியினர் தொடர் குற்றச்சாட்டை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் தென்காசியில் உள்ள ஒரு வாக்குசாவடியில் புகுந்த திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் பெண் காவல் ஆய்வாளருடன் வாய்தகராறில் ஈடுபட்டார். ” மத்தவங்க அங்க உக்காந்து இருக்காங்க. எங்க ஆளுங்க உக்கார கூடாதா. அவங்கள ஏன் விரட்டறீங்க” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி ” நான் யாரையும் விரட்டவில்லை. யார் உங்களிடம் அப்படி சொன்னார்களோ அவர்களை கூட்டி வாருங்கள்” என கூறினார்.

`

திமுக பிரமுகரை சமாதானம் செய்த இன்னொரு அதிகாரியிடம் ” யார் அந்த பெண் அதிகாரி. எந்த ஊர்” என திமுக மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் கேள்வியெழுப்பினார். அவருடன் திமுக தொண்டர்கள் பலர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய பிஜேபியினர் வாக்குசாவடியை மிரட்டி நினைக்கிறது திமுக என விமர்சிக்கின்றனர்.

```
```

……உங்கள் பீமா