Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இதென்னடா பிரதமர் மோடிக்கு வந்த சோதனை..??

இதென்னடா பிரதமர் மோடிக்கு வந்த சோதனை..??

24-11-21/ 16.20pm

டெல்லி : சத்திய சோதனை என்ற சொல்லாடல் தமிழகத்தில் மிக பிரபலம். இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அது பாரத பிரதமர் மோடிக்கு மிக மிக பொருந்தும்.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண்சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெற்றார். அப்போது அவர் குறிப்பிட்ட வார்த்தைகளை உற்றுநோக்கினால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வரும் அல்லது வரப்போகும் இன்னல்களை சூசகமாக குறிப்பிட்டிருப்பார். மனிதர் சொன்னது போலவே நடக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் இரண்டே தினங்களில்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் என்று கூறப்படுபவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதையடுத்து உச்சநீதிமன்றம் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிய நியமித்தது.

`

மஹாரஷ்டிரா பஞ்சாப் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களின் விவசாய பிரதிநிதிகள் அதில் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவில் இடம்பிடித்திருப்பவர் மஹாராஷ்டிர விவசாய சங்க தலைவர் அனில் கன்வாட். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும்வரை அந்தச்சட்டத்திற்கு எதிராக பேசிக்கொண்டிருந்தவர் தற்போது அடித்திருக்கும் பல்டி எந்த ஒரு விவசாய போராளியும் எதிர்பாராதது.

அனில் கூறியிருப்பதாவது ” வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியது தவறு. இதே போல நல்ல சட்டங்களை இனி எந்த அரசும் கொண்டு வரப்போவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு வந்த இந்த நல்ல சட்டத்தை வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு வாபஸ் வாங்கிவிட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

```
```

இந்த அனில் தற்போது வாயை திறந்திருக்கிறார். வெகு விரைவில் அனைத்து விவசாயிகளும் விவசாய சங்கங்களும் சட்டத்தை திரும்ப கொண்டு வர போராடுவார்கள் என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிவிட்டு தற்போது மீண்டும் வாழ்வாதாரத்திற்காக திறக்கவேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் கோரிக்கை வைப்பது போல விவசாய சங்கங்களும் கோரிக்கை எழுப்பும் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

……உங்கள் பீமா