Monday, November 11, 2024
Home > செய்திகள் > நியூஸ் 7 நடத்திய வாக்கெடுப்பு..! ஓடவிட்ட நெட்டிசன்கள்..!

நியூஸ் 7 நடத்திய வாக்கெடுப்பு..! ஓடவிட்ட நெட்டிசன்கள்..!

25-11-21/6.48am

சென்னை : நியூஸ் 7 நேற்று நடத்திய வாக்கெடுப்பில் அந்த செய்தி நிறுவனம் எதிர்பார்க்காத அதிரடியை நெட்டிசன்கள் காண்பித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்து நேற்று 200 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக ஆதரவு ஊடகங்கள் பல திமுகவின் ஆட்சி பற்றிய நேர்மறையான அல்லது ஆட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவந்தன. நியூஸ் 7 ஓரு படி மேலே போய் திமுகவின் இருநூறு நாட்கள் ஆட்சி பற்றிய வாக்கெடுப்பு நடத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜி 200 நாட்கள் 200க்கும் மேற்பட்ட சாதனைகள் என புகழ்ந்து தள்ளியிருந்தார்.

`

திமுக இதுவரை அறிவித்த திட்டங்கள் எல்லாம் முன்னரே புழக்கத்தில் இருப்பவை மற்றும் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட திட்டப்பணிகள் ஆகும். அதில் பல மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் நியூஸ் 7 நேற்று ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் 200 நாட்கள் உங்கள் மதிப்பீடு என கேள்வியெழுப்பியிருந்தது.

```
```

அதில் 0-25, 25-50, 50-75, 75-100 என குறிப்பிட்டிருந்தது. நெட்டிசன்கள் தயக்கமாக 0-25 என தேர்ந்தெடுத்திருந்தனர். 0-25 என்ற மதிப்பு 43% ஆனதால் அதை எதிர்பார்க்காத நியூஸ் 7 செய்தி நிறுவனம் அந்த டீவீட்டை டெலீட் செய்துவிட்டது. ஆளும்கட்சி தரப்பில் மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் திமுகவின் ஆட்யின் நிர்வாகத்திறமையின்மை வெளிப்பட்டு விடலாம் என அஞ்சியே இந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துவருகின்றனர்.

……உங்கள் பீமா