Thursday, May 14, 2026
Home > செய்திகள் > நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு ஜெயில்..! முழு பின்னணி..!

நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு ஜெயில்..! முழு பின்னணி..!

பஞ்சாப் : கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சித்து. காங்கிரஸுக்கே உண்டான உட்கட்சியில் குழப்பம் விளைவிக்கும் பாரம்பரியத்தை அப்படியே கடைபிடிப்பவர் இந்த நவ்ஜோத் சித்து. மேலும் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து மீண்டும் கட்சியில் இணைந்ததுடன் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை கடுமையாகவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்து மீது இருந்த பழைய வழக்கு ஒன்றில் தற்போது ஒருவருடம் சிறைத்தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார். அதுவும் முப்பது வருடங்கள் கழித்து என்பது குறிப்பிடத்தக்கது. 1988 டிசம்பர் 27அன்று நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது கூட்டாளியான ருபிந்தர் சிங் இருவரும் குர்நாம் சிங் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து ருபிந்தர் சிங் குர்நாம் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து குர்நாம் சிங் மரணமடைந்தார். இந்த வழக்கில் 2018ல் உச்சநீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனையிலிருந்து விடுவித்து 1000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அவரது கூட்டாளியான ருபிந்தர் சிங்கும் விடுவிக்கப்பட்டார்.

நவ்ஜோத் சித்துமீதான வழக்கு பாட்டியாலாவின் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்றும் சந்தேகத்தின் பலனாலும் சித்து மற்றும் அவரது கூட்டாளியான ருபிந்தரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2018ல் மரணமடைந்தவரின் குடும்பத்தினர் மறு ஆய்வுமனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் வந்தது. சித்து மீதான 304 ஏ கொலைக்குற்றச்சாட்டை நிராகரித்த அமர்வு ” வழக்கு பதிந்ததில் பிழை இருப்பதாக உணர்கிறோம். எனவே தண்டனை பிரச்சினையில் மறுஆய்வு மனுவை அனுமதிக்கிறோம். ஆனால் கொலைக்குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்.

ஆனாலும் அபராததுடன் ஓராண்டு சிறைத்தண்டனை அளிப்பதே பொருத்தமாக இருக்கும்” என தீர்ப்பளித்துள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி வழக்கறிஞர்கள் கூறுகையில் ” சித்து மற்றும் ருபிந்தர் இருவரும் 27 டிசம்பர் 1988 இல் பாட்டியாலாவில் அமைந்துள்ள ஷெரன்வாலா கேட் கிராஸிங் அருகே ஜிப்சியில் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மற்றும் இருவர் பணம் எடுக்க வங்கிக்கு சென்றுள்ளனர். அவரகள் சென்ற மாருதி கார் கிராசிங்கை அடைந்தபோது சித்து மற்றும் அவரது நண்பர் இருந்த ஜிப்ஸி நடுரோட்டில் நின்றுள்ளது. அதை அகற்ற குர்நாம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.