Friday, June 9, 2023
Home > செய்திகள் > ட்விட்டரில் போலிக்கணக்கு..! ஆப்படிக்க தயாராகும் எலான் மஸ்க்..?

ட்விட்டரில் போலிக்கணக்கு..! ஆப்படிக்க தயாராகும் எலான் மஸ்க்..?

14-5-22/9.42AM

இந்தியா : பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கிவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவிவந்தது. இதுகுறித்து பேசிய எலான் மஸ்க்கும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவிருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இடதுசாரிகளை அறவே வெறுக்கும் எலானின் இந்த செயல் பலரது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எதிர்கொண்டது. மேலும் ட்விட்டரின் 9.7 சதவிகித பங்குகளை கையில் வைத்திருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும் பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.

பல முக்கிய அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என யூகங்கள் வெளிவந்தது. மேலும் தற்போதைய CEOவான பராக் அகர்வாலுக்கும் எலான் மஸ்க்குக்கும் சில கருத்துவேறுபாடுகள் நிலவியது. இதனிடையே எலான் மஸ்க் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அரசுப்பணியாளர்கள் மற்றும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு சிறிதளவு பணம் வசூலிக்கப்படும் என கூறியிருந்தார்.

`

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்போதைக்கு தள்ளிவைத்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் கணக்குக்களில் போலியான கணக்குகள் லட்சக்கணக்கில் இருப்பதாக தெரியவந்ததையடுத்து அந்த கணக்குகளை நீக்கிய பிறகு ட்விட்டரை வாங்க முடிவுசெய்திருப்பதாக எலான் மஸ்க்அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் போலிக்கணக்குகளை உடனடியாக நீக்கும் வழியை ஆய்வுசெய்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்வாங்குவதில் சிக்கல் நீடிக்கலாம் என கருதப்படுகிறது.

…..உங்கள் பீமா