கடந்த 2021 ஆகஸ்ட் 28 அன்று குருவிலாங்கோடு சைரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த குடும்பங்களுக்கு பிஷப் பால ஜோசப் கல்லாரன்காட் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதில் லவ் ஜிஹாத் மற்றும் போதை கும்பல் மதமாற்றம் குறித்து வெளிநாடு வாழ் மற்றும் உள்நாடு வாழ் சகோதர சகோதரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன் திருச்சபையில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஜோசப் கல்லாரன்காட் “நம் வீ ட்டு பெண்களை லவ் ஜிஹாத் மூலம் போதை ஜிஹாத் மூலம் மத மாற்றம் செய்து வருகிறார்கள். அதை தடுக்க நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படவேண்டும்.
நம் குழந்தைகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை தவறான பாதையில் தீவிரவாத செயலில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களை போதைக்கு அடிமையாக்கி வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். அதனால் நாம் அனைவரும் மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும்.” என கூறினார்.
மேலும் “வெளிநாட்டிலிருந்து திருச்சபை ஆட்கள் போல பேசி வெளிநாட்டில் படிக்கும் நம் பெண்குழந்தைகளின் தகவல்களை நம்மிடமே சேகரிக்கிறார்கள். அப்படி ஒரு அழைப்பு நம் திருசபைக்கே வந்தது. சபை ஊழியர்கள் விசாரிக்க ஆரம்பித்த உடன் அந்த மர்ம நபர் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டான்”. என தெரிவித்தார்.
இதையடுத்து மலபார் இஸ்லாமிய கூட்டமைப்பு பிஷப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டங்கள் தொடங்கியது. இந்நிலையில் இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய பினராயி ” போதைக்கு மதம் கிடையாது. மேலும் பிஷப் எந்த மதத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவர் எந்த சூழ்நிலையில் அப்படி ஒரு கருத்தை வெளியிட்டாரோ தெரியவில்லை. சமூகத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர் கூறிய போதை ஜிஹாத் என்பதற்கு குறிப்பிட்ட மத சாயம் பூச முடியாது.” என குறிப்பிட்டார்.
இதை விட சிறந்த உருட்டு வேறெதுவும் இல்லை என கேரள நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.