Saturday, October 5, 2024
Home > ஆன்மிகம் > திருடப்பட்ட கோவில் சிலைகள்..! அடுத்து நடந்த ருசிகரம்..!

திருடப்பட்ட கோவில் சிலைகள்..! அடுத்து நடந்த ருசிகரம்..!

உத்திரபிரதேசம் : தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கோவிலிலுள்ள இறைவன் திருமேனிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் கோவிலை பராமரிக்கவும் அதன் வருவாயை கருவூலத்தில் சேர்க்கவும் மட்டுமே முயற்சி எடுப்பதாகவும் கண்காணிப்பில் அக்கறை காட்டுவதில்லை எனவும் ஆலய பாதுகாப்பு குழுவினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.



`

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில் 300 வருடம் பழமையான விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 16 திருமேனிகளை கடந்தவாரம் திருடர்கள் சிலர் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு காவல் ஆய்வாளர் ராஜிவ் சிங் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இது சித்ரகூட் பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

```
```

புராதன கோவில் திருமேனிகள் திருடப்பட்டதால் பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்தனர். காவல்துறையினர் பக்தர்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதாக உறுதியளித்தனர். மேலும் பக்தர்கள் தொடர் பிராரத்தனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சித்ரகூட்டில் விஷ்ணு கோவில் தலைமை பூசாரி வீட்டின் அருகே 16 சிலைகள் மற்றும் ஒரு கடிதம் வைக்கபப்ட்டிருந்தது.

அந்த கடிதத்தில் ” எங்களால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. பயங்கர கனவுகள் எங்களை வதைக்கின்றன. இந்த மதிப்புமிக்க சொத்து உங்களுடையது. அதை உங்களிடமே சேர்க்கிறோம். தவறு செய்த எங்களை மன்னித்து அருள்பாலியுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருமேனிகள் 16ம் ஒப்படைக்கப்பட்டது.



இந்த திருமேனிகளில் ஒன்று அஷ்டதாது. இது தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் அந்திமனி அல்லது பாதரசம் ஆகியவற்றின் சம விகிதத்தில் (ஒவ்வொன்றும் 12.5%) பாரம்பரிய கலவையாகும்.மீதமுள்ள 15 ம் எட்டு உலோகங்களின் கலவையால் ஆனது. அதில் வெள்ளி தங்க ஆபரணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருடர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.