Saturday, July 27, 2024
Home > செய்திகள் > டைம் டிராவல் செய்த இந்து சமய அறநிலையத்துறை..? 1980 ல் கட்டப்பட்ட கோவிலுக்கு 1920ல் ராஜகோபுரமா….?

டைம் டிராவல் செய்த இந்து சமய அறநிலையத்துறை..? 1980 ல் கட்டப்பட்ட கோவிலுக்கு 1920ல் ராஜகோபுரமா….?

2-11-21/ 15.16pm

1951களில் இந்துசமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு 1959லிருந்து அரசு வசம் சென்றது. 1.1.1960 லிருந்து தமிழகத்தில் உள்ள வருமானம் தரக்கூடிய அனைத்து கோவில்களும் அரசின் வசம் முழுமையாக செல்ல சட்டம் இயற்றப்பட்டது. அதிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அரசு அலுவலகம் போல இயங்கி வருகிறது.

கோவில்களுக்கு சொந்தமான நஞ்சைநிலங்கள் புஞ்சை நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் 1960 லிருந்து காணாமல் போனதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை தனியார் வசம் ஒப்பந்தமுறையில் 100 வருடம் என குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

ஏக்கருக்கு ஒப்பந்த தொகை இரண்டு ரூபாயாக நிர்ணயித்த அவலமும் நடந்தேறியிருக்கிறது. இந்த அரசியல் கட்சி அந்த அரசியல் கட்சி என பாகுபாடில்லாமல் இரண்டு திராவிட கட்சிகளும் கோவில்களின் நிலத்தை தாரைவார்த்திருப்பதாக பக்தர்கள் புலம்புகின்றனர்.

`

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை அதன் நிர்வாகத்திறமையை வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது என பொதுமக்கள் விமர்சிக்கின்றனர். சென்னை வடபழனி முருகன் திருக்கோவிலை குறிப்பிட்டு அந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அதில்,

“1980ம் ஆண்டு எளிய ஓலைக்கூரை கொட்டகையுடன் இத்திருக்கோவில் கட்டப்பட்டது. 1920ல் புதுப்பிக்கப்பட்டு இராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் ஆண்டுக்கு சுமார் 7000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

```
```

அதாவது 1980ல் திருக்கோவில் கட்டப்பட்டதாகவும் அதை 1920ற்கு டைம் டிராவல் செய்து ராஜகோபுரம் எழுப்பியதாகவும் தவறான தகவலை பதிவிட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இதில் மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர் புகைப்படம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயல். இதை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

…..உங்கள் பீமா

#இந்துசமயஅறநிலையத்துறை #சேகர்பாபு #தமிழகஅரசு #திமுக #hrce #tamilnadu