Monday, September 28, 2026
Home > செய்திகள் > மீண்டும் சைபர் அட்டாக்..! விழி பிதுங்கும் அரசுத்துறை நிறுவனங்கள்

மீண்டும் சைபர் அட்டாக்..! விழி பிதுங்கும் அரசுத்துறை நிறுவனங்கள்

10-4-22/10.32AM

புதுதில்லி : இந்தியாவில் அடுத்தடுத்து நிகழும் சைபர் அட்டாக்கால் இந்திய நுண்ணறிவு மற்றும் இணையங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியிருப்பதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு சிலமணிநேரம் ஹேக் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்திரபிரதேச முதல்வர் யோகியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டு பரபரப்பை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் யூஜிசி எனப்படும் யூனிவர்சிட்டி க்ராண்ட்ஸ் கமிஷன் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று அதிகாலை ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதே போல இந்திய வானிலை மண்டலத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்தடுத்து நிகழும் இந்த சம்பவங்களால் மத்திய அரசு இதுகுறித்த கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

….உங்கள் பீமா