Friday, September 22, 2023
Home > அரசியல் > மானியமாக பெறும் 1102 கோடிகள் சிலையாக போகிறதா..? மக்களுக்கு மொட்டை மட்டும்தான் இலவசமா..! எதிர்க்கட்சிகள் முக ஸ்டாலினுக்கு கேள்வி..!!

மானியமாக பெறும் 1102 கோடிகள் சிலையாக போகிறதா..? மக்களுக்கு மொட்டை மட்டும்தான் இலவசமா..! எதிர்க்கட்சிகள் முக ஸ்டாலினுக்கு கேள்வி..!!

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பதை விட சிலைகளுக்கும் நினைவிடத்திற்கும் மட்டுமே முன்னுரிமை செலுத்துகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த வித நிதியும் ஒதுக்கவில்லை என திமுகவினர் கூறிக்கொண்டிருக்கையில்,

மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய வருவாய் பற்றாக்குறை மானிய நிதியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 6-வது மாதத் தவணை தொகையாக, ரூ.9,871.00 கோடியை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் ரூ.59,226.00 கோடி, தகுதிவாய்ந்த மாநிலங்களுக்கு மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது தவணையாக தமிழ்நாட்டிற்கு ரூ 183.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 1102.00 கோடி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

`

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 275-இன் கீழ் மாநிலங்களுக்கு, பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. பகிர்விற்கு பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த மானியங்கள் மாத தவணையாக வழங்கப்படுகின்றன.

பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு வழங்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

2021-22-ஆம் நிதி ஆண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ. 1,18,452 கோடி வழங்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் இதுவரை ரூ 59,226.00 கோடி (50%) விடுவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.

இந்த மாதம் (செப்டம்பர் 2021) 184 கோடி நிதி தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. மொத்த நிதியின் அளவு 1102 கோடி ஆகும். “பத்து ரூபா மொட்டைய இலவசமா அடிச்சுட்டு மின்சார கட்டணம் அத்தியாவசிய உணவுப்பொருள் விலை எல்லாத்தயும் ஏத்திடுச்சே திமுக” என திமுக தொண்டர் ஒருவரே புலம்புகிறார்.

…உங்கள் பீமா