7-2-22/16.10pm
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தமிழகத்தில் வரவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மேலும் பிஜேபி தரப்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேட்பாளர்களை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார்.

மேலும் கமுதி பகுதியில் பிஜேபி வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வாகி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் நேற்று வேட்பாளர்களை சந்தித்த அண்ணாமலை ” உங்கள் கையில் இருக்கும் செல்போன் என்பது மிகவும் சக்திவாய்ந்த கருவி. இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த செல்போன் உங்களுக்கான வேலைகளை செய்யும்.

நீங்கள் நேரடியாக வாக்காளர்களை சந்தித்தாலும் ஒருமுறையாவது போனில் பேசுங்கள். நீங்கள் செய்யும் கடமையை வீடியோ பதிவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள்.எவ்வளவு வாக்காளர்கள் இருந்தாலும் அனைவரையும் சந்தியுங்கள். மத்திய அரசின் பயனாளிகளை நேரிடையாக சந்திக்க முயற்சி செய்யுங்கள். அடுத்த பதினோரு நாட்கள் கடின உழைப்பும் இருக்கவேண்டும். புத்திசாலித்தனமான உழைப்பும் இருக்கவேண்டும்.

தெருமுனைப்பிரச்சாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல சமூகவலைத்தள பிரச்சாரமும் முக்கியம். இரண்டையும் சேர்ந்தாற்போல செய்யுங்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்” என கூறியதோடு திமுக அமைச்சர் மஸ்தான் குறித்தும் விமர்சித்தார். “அமைச்சர் மஸ்தானின் மனைவி மாநகராட்சி வேட்பாளர்.அமைச்சரின் மகன் பேரூராட்சி வேட்பாளர். தமிழகம் முழுவதும் திமுகவில் இதுதான் நிலைமை” என திமுகவின் வாரிசு அரசியல் குறித்து காட்டமாக விமர்சித்தார்.
…..உங்கள் பீமா