Monday, December 2, 2024
Home > அரசியல் > பிராமணர்களை உங்கள் கிராமத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..! முதல்வரின் தந்தை சர்ச்சை பேச்சு..!

பிராமணர்களை உங்கள் கிராமத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..! முதல்வரின் தந்தை சர்ச்சை பேச்சு..!

“தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எங்களை புறந்தள்ளுவதோடு எங்களை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். சாதிய ரீதியான தாக்குதலுக்கு ஆளானோரை காப்பாற்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எந்த சட்ட ரீதியான பாதுகாப்பும் இல்லை” என பிரமாண சங்கத்தை சேர்ந்த சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கர் மாநில அரசின் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ” பிராமணர்கள் உங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் விரட்டிவிடுங்கள். உள்ளே அனுமதிக்காதீர்கள்” என பேசினார். இது ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி இருந்தது.

`

அதையடுத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் டிடி நகர் காவல்நிலையத்தில் சர்வ் ப்ராமின் சமாஜ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல்வரின் தந்தையான நந்தி குமார் பாகெல் மீது சாதியை இழிவுபடுத்துதல் உட்பட இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 153A 505(1) பி சட்டப்பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

…உங்கள் பீமா