Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > களத்தில் இறங்கிய இந்து முன்னணியினர்..! கழற்றப்பட்ட அரபிக் பலகை..!

களத்தில் இறங்கிய இந்து முன்னணியினர்..! கழற்றப்பட்ட அரபிக் பலகை..!

13-3-22/12.50PM

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் மரபுக்கு மீறி பொருத்தப்பட்ட அரபிக் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகை இந்து அமைப்பினரின் போராட்டத்தால் நீக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பேர்ணாம்பட்டு நகராட்சி. 52 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் தோல் பதனிடும் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக இருப்பவர் எஸ்.ஏ. செய்யது ஹுசைன். இவர் தனது அலுவலக அறையில் தனது இருக்கைக்கு பின்னால் அல்லா ஒருவனே கடவுள் எனும் பொருள்படும்படி அரேபிய வார்த்தைகளில் பலகை ஒன்றை மாட்டியிருந்தார்.

அந்த பலகையில் தமிழக அரசின் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் இந்துமுன்னணியினர் காதுகளில் எட்டவே நகராட்சி அலுவலகத்தின் மூன் கூடினர். பின்னர் போராட்டம் அறிவிக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கவே அடுத்த அரைமணிநேரத்தில் அந்த அரேபிய பலகை அகற்றப்பட்டது.

`

மேலும் ஆம்பூர் வேலூர் பகுதிகளில் உள்ள அரசு வங்கிகளில் அரேபிய மொழியில் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் வங்கியின் பெயரே அரேபிய மொழியில் எழுதப்பட்டிருப்பதாகவும் இந்து அமைப்பினர் கூறுகின்றனர்.

```
```

கடந்த காலங்களில் இல்லாமல் திடீரென முளைக்கும் இந்த செயல்களை அடையாளம் கண்டு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று இந்து அமைப்பினர் கூறுகின்றனர். மேலும் நேற்று முன்தினம் முதல்வர் குறிப்பிடுகையில் சாதிமத அடையாளங்களை கொண்டு கலகம் விளைவிக்க நினைப்போரை இருப்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா