10-2-22/13.50PM
நாகப்பட்டினம் : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜேபியினர் மீதான தாக்குதல் தொடர்ந்துவருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன்னர் நிலக்கோட்டை பகுதியில் பிஜேபி பெண் வேட்பாளர் ஒருவர் திமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இதனிடையே நேற்று நள்ளிரவு பிஜேபி தலைமையகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. நாகப்பட்டினம் பிஜேபி இளைஞரணி பிரமுகராக இருப்பவர் புவனேஷ் ராம். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்குசக்கர வாகனத்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.இது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் ” கடந்த சிலநாட்களாக பாஜக தேர்தல் அலுவலகம் மற்றும் பாஜகவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவேண்டும். எனக்கு வழங்கப்பட்டிருந்த ஒய் பிரிவு பாதுகாப்பை திமுக பதவியேற்றவுடன் எக்ஸ் பிரிவிற்கு மாற்றினார்கள். எனது போனை ஒட்டுக்கேட்பதுடன் உடனிருக்கும் ஆட்களை வைத்து வேவுபார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
…..உங்கள் பீமா
