Tuesday, April 22, 2025
Home > அரசியல் > முதல்வருடன் கரூர் எம்பி ஜோதிமணி திடீர் சந்திப்பு..! அவரே கொடுத்த விளக்கம்..

முதல்வருடன் கரூர் எம்பி ஜோதிமணி திடீர் சந்திப்பு..! அவரே கொடுத்த விளக்கம்..

28-12-21/13.18pm

சென்னை : நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை கரூர் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி திடீரென சந்தித்தார். ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான செல்வப்பெருந்தகையும் உடனிருந்தார். இதுகுறித்து ஜோதிமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் நேற்று மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணன் செல்வப்பெருந்தகைஅவர்களுடன் சந்தித்துப் பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசினேன்.முதலமைச்சர் எப்பொழுதும் போல இப்பொழுதும் அண்ணனாகவே இருக்கிறார்,இருப்பார் என்பது மகிழ்ச்சியும் ,ஆறுதலும் அளிக்கிறது.

அண்ணனை மட்டுமல்ல ஒரு ஆகச்சிறந்த ஜனநாயகவாதியையும் உரையாடலில் உணர்ந்தேன். அதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு முக்கியமான கோரிக்கைகளையும் முதலமைச்சர் அவர்களிடம் முன்வைத்தேன். மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்ய 30% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பிட வசதிசெய்ய இந்த திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

`

இடுப்புக்கு கீழ் உணர்வற்று செயலிழந்துள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும்.வறுமையில் வாடும்,உதவிக்கு யாருமற்று தனித்து வாழும் தாய்மார்களின் கவனிப்பில் உள்ள இந்த குழந்தைகளுக்கு டயபர் ( diaper) செலவை அரசு ஏற்கவேண்டும்.

```
```

இந்த இரண்டு கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார். கடந்தமுறை சந்தித்தபோது மாநில வளர்ச்சி,ஒருங்கிணைப்பு கண்காணிப்பு கமிட்டி அமைக்கவேண்டும் என்று கோரியிருந்தேன்.உடனடியாக கமிட்டி அமைத்ததற்கு நன்றி தெரிவித்தேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

…..ஆய்ஷா ரகுமான்