Friday, March 29, 2024
Home > செய்திகள் > மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்க தடை..! அரசு அதிரடி..!

மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்க தடை..! அரசு அதிரடி..!

29-11-21/11.40am

சென்னை : மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்க தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒலிபெருக்கிகள் வைக்க பல கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஏற்படும் ஒலியால் மாநிலத்தில் ஒலி மாசு அதிகம் ஏற்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீக்க உத்தரவிட்டு நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவிட்டது.

எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினருக்கு எதிரான சதியென கூறி குறிப்பிட்ட பிரிவினரை தூண்டிவிட்டு அரசியல் செய்தது. இந்நிலையில் சவூதி அரசு மசூதிகளில் மதக்கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி வாங்கவேண்டும் என உத்தரவிட்டது. மேலும் மதரஸாக்களில் மதபோதகர்களை பணியில் நியமிக்க அரசின் அனுமதி வாங்கவேண்டும் என கடுமையான உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்திருந்தது.

`

இதனிடையே நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மசூதிகளில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அரசின் அனுமதிபெற்றே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மொத்தம் 94000 மசூதிகள் இருப்பதாகவும் அவைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மசூதிகளில் இருக்கும் ஒளிபெருக்கிகள் மூலம் அதிகமான சத்தம் எழுப்பப்படுவதாகவும் அதனால் முதியவர்கள் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக குடியிருப்புவாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் இஸ்லாமிக் அபயர்ஸ் மினிஸ்ட்ரி செய்தி தொடர்பாளர் அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

```
```

இதுகுறித்து இந்திய இணையதளவாசிகள் சிறுபான்மை காவலர்கள் சவுதி மன்னரிடம் நேரடியாக முறையிட்டு சிறுபான்மையினருக்கு நீதி வாங்கி தருவார்களா என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ராசா அகாடமி போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் நேரடியாக சவூதி மன்னரை சந்தித்து இது குறித்து புகாரளிக்க வேண்டும் எனவும் சவூதி அரண்மனையின் முன்னே முடிந்தால் போராடி நீதி வாங்கவேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

….உங்கள் பீமா