10-11-21/ 17.18pm
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக பக்தர்களின்றி விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டது. மூலவருக்கு நடந்த ஆராதனையின் போது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரது பெயரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் தியேட்டர்கள் மால்கள் என அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கினாலும் தனிமனித இடைவெளியின்றியும் விடுப்பின்றியும் டாஸ்மாக் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக பிஜேபி தலைவர் தமிழகத்தில் கோவில்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்திய பின்னரே இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் இந்துக்கள் கொண்டாடும் விழாவான சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்துமத கடவுளர்கள் மறுப்பாளரான முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரது பெயரிலும் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்து கடவுள் மறுப்பாளரான முக ஸ்டாலின் இந்த நிகழ்வை எப்படி அனுமதித்தார் என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் முதல்வரின் மறைமுக உத்தரவின் பெயரில் அர்ச்சகர்கள் செயல்பட்டார்களா என சந்தேகத்தை கிளப்புகின்றனர். இதுகுறித்து பேசிய எதிர்கட்சியினர் ” திமுகவின் வரலாறு அப்படித்தான். விவசாயிகளுக்காக போராடுகிறோம் என கூறிவிட்டு விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என கூறிக்கொண்டு மறைமுகமாக சாமி தரிசனம் செய்கிறார்கள். ” என குறிப்பிட்டனர்.
மேலும் இந்து அமைப்பினர் அர்ச்கர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
…….உங்கள் பீமா