26-12-21/10.48AM
ஆலப்புழா : இந்த தொடர் கொலைகளை நிறுத்த யார் காலில் வேண்டுமானாலும் விழத்தயாராய் இருக்கிறேன் என நடிகரும் எம்பியுமான சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று தெரிவித்தார்.
கேரள பாஜக ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரெஞ்சித் சீனிவாசன் கடந்த வாரம் சில அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த மாநில செயலாளர் படுகொலை செய்யப்பட்ட அடுத்த சிலமணிநேரங்களிலேயே இந்த அசம்பாவிதம் அரங்கேறியது. இது பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று நடிகரும் பாஜக ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி படுகொலை செய்யப்பட்ட ரெஞ்சித் இல்லத்திற்கு சென்றார். அங்கு ரெஞ்சித்தின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ” ஒவ்வொரு அரசியல் கொலைகளும் இந்த மண்ணின் மாண்பை சிதைக்கிறது.
இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த தொடர் கொலைகளால் குழந்தைகளின் மனது பெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்கள் சார்ந்த சமூகத்தின் வெளிப்பாடுகளே பின்னாளில் அவர்களின் குணமாக மாறிபோய்விடும். இந்த அரசியல் கொலைகளை தடுக்கவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் நான் யார் காலில் வேண்டுமானாலும் விழத்தயாராய் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
….உங்கள் பீமா