19-11-21/5.55am
மேற்கு வங்கம் : பி.எஸ்.எப் வீரர்களை கற்பழிப்பாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் என இடதுசாரி முன்னணி பெண் தலைவர் ஒருவர் கூறி வீரர்களை அவமானப்படுத்தினார்.
பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் திரிபுரா மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் மற்றும் தீவிரவாத செயல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு BSFன் அதிகார வரம்பை 15கிமி முதல் 50 கிமீ வரை மாற்ற முடிவெடுத்திருக்கிறது. அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.
இதை கண்டித்து மேற்கு வங்க மமதா அரசு கடந்த செவ்வாய்க்கிழமை சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் கடந்த திங்களன்று கொல்கொத்தாவில் இடது சாரிகள் பத்திரிக்கையாளர்மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பிரபல நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இடது சாரி முன்னணி தலைவர் அபர்ணாசென் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர் பி.எஸ்.எப் ன் எல்லை உச்சவரம்பை அதிகரித்த மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்துக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை விட பி.எஸ்.எப்க்கு கொடுப்பதாக சாடினார். அதோடு நில்லாமல் பி.எஸ்.எப் வீரர்கள் எல்லாம் கொலைகாரர்கள் கற்பழிப்பு குற்றவாளிகள் என தனது வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார். இதை கூட்டத்தில் இருந்த எந்த பத்திரிக்கையாளரும் கண்டிக்க முன்வரவில்லை என்பது உச்சகட்ட வேதனை.
இதையடுத்து மேற்குவங்க பிஜேபி தலைவரான அனிர்பன் கங்குலி, அபர்ணா சென் பி.எஸ்.எப் வீரர்களை தரக்குறைவாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய பிஜேபியினர் ” எல்லை பகுதிக்குள் அண்டை நாட்டினர் அனுமதியில்லாமல் நுழைந்து எல்லையோர கிராமங்களில் மக்களோடு மக்களாக கலந்துவிடுகின்றனர்.
மம்தா அரசு அவர்களை ஒட்டு வங்கியாக மாற்றி தங்களது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்க்கும் எல்லையில் எதுவும் அசம்பாவிதம் நடப்பதை தவிர்ப்பதற்குமே பி.எஸ்.எப் ன் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இடது சாரிகளுக்கு குடைச்சலை கொடுத்திருக்கிறது.” என தெரிவிக்கின்றனர்.
……..உங்கள் பீமா