Friday, March 29, 2024
Home > அரசியல் > காற்றாலை நிறுவனத்தை மிரட்டினாரா திமுக சட்டமன்ற உறுப்பினர்..?

காற்றாலை நிறுவனத்தை மிரட்டினாரா திமுக சட்டமன்ற உறுப்பினர்..?

26-12-21/8.44am

விளாத்திகுளம் : விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காற்றாலை நிறுவன ஊழியர்களை தகாத வார்த்தைகளில் அருவருப்பாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பல அறிகிக்கைகள் வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு சில திட்டங்களை தவிர பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. தமிழக பிஜேபி தலைவர் சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை சுட்டிக்காட்டினார்.

அந்த நிருபர் முதலமைச்சரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்கிற ரீதியில் கேள்வியெழுப்பினார். அதற்க்கு பதிலளித்த தமிழக பிஜேபி தலைவர் முதல்வர் நல்ல முறையில் திட்டங்களை அறிவித்தாலும் கேபினட் அமைச்சர்கள் சரியாக செயல்படுவதில்லை என கூறியிருந்தார். மேலும் மான் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குன்னூர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் துரிதமாக செயல்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`

இதனிடையே திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருப்பதாகவும் கமிஷன் கேட்டு நிறுவனங்களை தொல்லை கொடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் காற்றாலை நிறுவன ஊழியர்களை ஆபாசமாக அருவறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து பாஜக பிரமுகர் ஒருவர் தனது ட்விட்டரில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் “நம் பிரதமர்மோடி Renewable Energy மூலம் மின்சாரம் தயாரிக்க பாடுபட்டு வருகிறார் ஆனால் ஆளும் திமுக அரசின் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு அடாவடிதனம்” என பதிவிட்டுள்ளார்.

```
```

முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து மார்கண்டேயனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பாரா என நடுநிலையாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா