Monday, December 2, 2024
Home > செய்திகள் > கட்டுக்கட்டாக பணம்..! காரோடு சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்..!

கட்டுக்கட்டாக பணம்..! காரோடு சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்..!

கொல்கொத்தா : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரின் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

உங்கள் வணிகத்தை ஆன் லைனில் விளம்பரப்படுத்த வேண்டுமா…? மிகக்குறைந்த செலவில் உங்கள் வணிபமும் ஆன்லைனில்..! தொடர்புக்கு 7338816562 http://www.tsimart.com

 



`

இம்மாநிலத்தின் கூட்டணி காங்கிரசின் இர்பான் அன்சாரி ராஜேஷ், கொங்காரி ஆகிய முவரும் நேற்று மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவுக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ஹவுரா அருகே காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

```
```

தற்போது பணத்தை எண்ணும்பணி நடைபெற்று வருகிறது.மேலும் கொல்கொத்தா போலீசார் மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் தொடர் அரசியல்கொலைகள் மற்றும் கலவரங்கள் வெடித்தது வரும் நேரத்தில் இந்த பணம் ஏதேனும் சமூக விரோத சக்திகளுக்கு கொடுக்கப்பட இருந்ததா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.