Thursday, June 20, 2024
Home > செய்திகள் > பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி உரிமம் ரத்து..!!உள்துறை அதிரடி..!

பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி உரிமம் ரத்து..!!உள்துறை அதிரடி..!

7-2-22/12.40PM

கேரளா : கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக தெரிகிறது.

பிரபல ஜமாத்இஸ்லாமி அமைப்பால் கேரளாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் செய்தி நிறுவனம் மீடியா ஒன். இதன் அப்லிங் டவுன்லிங் உரிமத்தை புதுப்பிக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் IB அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து கேரள கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கொடிக்குன்னில் சுரேஷ், சுதாகரன், என்.கே.பி. பிரேமசந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தனர். அனுராக் தாக்கூர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அறிவுறுத்தினார்.

`

இதுகுறித்து அனுராக் ” மீடியா ஒன் நிறுவனத்தின் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளை அடுத்து உள்துறை அமைச்சகம் தொடர்புடைய செய்திநிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார். இது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என திமுகவின் தலைவர்களுள் ஒருவரும் திமுக தொண்டர்களால் அடுத்த முதல்வர் என கருதப்படும் கனிமொழி எம்பி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

```
```

மேலும் மீடியா ஒன் சார்பாக சென்ற தூதுக்குழுவை தலைமை தாங்கி சென்ற சுரேஷ் கூறுகையில் ” அமைச்சர் தாகூரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தோம். அவரிடம் நடந்த விவாதத்தில் IB அமைச்சகத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சரை சந்திக்குமாறும் வலியுறுத்தினார். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அமைச்சர் அமித்சாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என கூறியுள்ளார்.

……உங்கள் பீமா