Friday, February 7, 2025
Home > செய்திகள் > வீடு புகுந்து வெட்டுவோம்..! பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக..?

வீடு புகுந்து வெட்டுவோம்..! பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக..?

26-12-21/11.27am

சென்னை : திமுக கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும்வேளையில் திமுகவின் தோழமை கட்சியான விசிக்காவின் கல்பாக்கம் பகுதி உறுப்பினர் ஒருவர் பாஜக தலைவர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளராக இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் நேற்று இரவு ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “காங்கிரஸ் இல்லாத பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட முயற்ச்சிக்கு திமுக துணை போய்விடக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை கட்டினால் அது பாஜகவுக்கு சாதகமாக முடியும்-தொல் திருமாவளவன்.

தொல்.திருமாவளவன் அவர்களின் இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. காங்கிரஸ் – திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. திரு. தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் ‘தமிழர்களை’ கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட ‘அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே’ முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?” என பதிவிட்டிருந்தார்.

`

இந்த பதிவில் விசிக கட்சி உறுப்பினரான தில்லை கருணாகரன் என்பவர் கொலைமிரட்டல் விடுத்ததோடு வீடு புகுந்து வெட்டுவோம் என கூறியுள்ளார். இது பிஜேபியினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

```
```

…..உங்கள் பீமா