Saturday, July 27, 2024
Home > செய்திகள் > டெல்லி கமிஷனர் நியமன விவகாரம்..! மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு..!!

டெல்லி கமிஷனர் நியமன விவகாரம்..! மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு..!!

ஆம் ஆத்மீ டெல்லியில் ஆட்சிக்கு வந்த பின்பு வன்முறைகளும் போராட்டமும் அதிகரித்துவிட்டது. டெல்லி செங்கட்டியிலும் பாராளுமன்றம் அருகிலும் போராட்டங்கள் நடத்த டெல்லி அரசு அனுமதித்தது. டெல்லியில் நடந்த வன்முறைகளில் பல உயிர் பறிபோயிருக்கிறது என பிஜேபியின் விமர்சிக்கின்றனர்.

கடந்த வருடம் நடந்த போராட்டத்தில் 60க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒரு உளவுத்துறை அதிகாரி 400க்கும் மேலான கத்திக்குத்து காயங்களுடன் சாக்கடையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மீ எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இப்படி சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் மத்திய அரசால் ராகேஷ் அஸ்தானா டெல்லியின் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின்பு அனுமதியற்ற இடங்களில் போராட்டம் நடைபெறுவது தடுக்கப்பட்டது. மேலும் வன்முறைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

`

இந்நிலையில் கமிஷனர் நியமனத்தை எதிர்த்து ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் நீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இன்று அந்த வழக்கு தொடர்பான மனுவை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் “டெல்லியின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், எல்லைதாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்கவும் அனுபவத்தையும் பனி மூப்பையும் கருதியே ராகேஷ் அஸ்தானா டெல்லியின் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.” என தெரிவித்துள்ளது.

```
```

இதனால் கமிஷனரை திரும்பபெறும் எண்ணமில்லை என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டது மத்திய அரசு. இது பிரிவினைவாதிகள் மத்தியில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது. இனி போராட்டம் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாகவோ, ஜனநாயக உரிமை எனும் பெயரில் வன்முறையில் ஈடுபடவோ முடியாது என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா