Tuesday, May 19, 2026
Home > செய்திகள் > எனது ஓட்டு பிஜேபிக்கே என வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

எனது ஓட்டு பிஜேபிக்கே என வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

12-2-22/18.50pm

நொய்டா : தமிழகம் முதற்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பிஜேபியினர் மற்றும் பிஜேபி ஆதரவாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது என நேற்று பிஜேபி மூத்த தலைவர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அவரின் கூற்றுப்போலவே கடந்த இருநாட்களில் ஹிஜாப் பிரச்சினையில் பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே எனது வாக்கு பாஜகவிற்கே என வாட்சப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட வாலிபரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. நொய்டாவில் அக்னிவீர் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதில் தன்னார்வலராக பணிபுரிபவர்கள் பவன் தாக்குர் மற்றும் ரவி தாக்குர். இவர்கள் இருவரும் தங்களது மொபைலில் எங்கள் ஓட்டு பாஜகவிற்கே என ஸ்டேட்டஸ் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காயம்பட்ட பசுமாடுகளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டு திரும்பும் வேளையில் வழிமறித்த சலீம்,பாஷா,ஷதாப், சல்மான்,அல்தாப் அப்ரோஸ் மற்றும் அவரர்களது நண்பர்கள் சிலர் தன்னார்வ தொண்டர்களான விரேந்தர்சிங் சௌத்திரி அதுல,அஜய்,ரவி மற்றும் பவன் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக அக்னிவீர் அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சிராக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ரவி தாகூர் மற்றும் பவன் தாகூரை கடத்தி ஒரு அறையில் பூட்டிவைத்ததாகவும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாகவும் போலீசார் வந்து மீட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே காயமடைந்த நால்வரும் மேல்சிகிச்சைக்காக நொய்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினை சலசலப்பை கிளப்பியுள்ளது.

…..உங்கள் பீமா