Friday, June 9, 2023
Home > அரசியல் > விவசாயிகள் போராட்டத்துக்கு நிதி கொடுப்பதே நாங்கள்தான்..! ஒப்புக்கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ…!

விவசாயிகள் போராட்டத்துக்கு நிதி கொடுப்பதே நாங்கள்தான்..! ஒப்புக்கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ…!

மத்திய அரசு ஏற்கனவே இருந்த வேளாண் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அது நேரிடையாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருந்தது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யலாம் என்றும், நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வியாபாரிகளுக்கும் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யலாம் எனவும் திருத்தம் கொண்டுவந்தது.

இதனால் இடைத்தரகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுவரை விளைபொருட்களுக்கு இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்வதே விலையாக இருந்தது. இதில் மத்திய அரசு கைவைத்ததால் பதறிப்போன விவசாயிகள் என கூறிக்கொள்ளும் இடைத்தரகர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நாடு முழுதும் விவசாய சட்டத்தை ஆதரிக்க பஞ்சாப் மாநிலம் மட்டும் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் டெல்லி சென்று போராடுங்கள் ஆனால் பஞ்சாபில் வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

`

இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏவான ராஜ்குமார் வெர்கா நேற்று முன்தினம் TOI க்கு அளித்த பேட்டியில் “வடஇந்தியாவில் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தவைப்பேதே காங்கிரஸ் தான். அதற்கான நிதியையும் தலைமை கொடுக்கிறது. இந்த போராட்டம் பிஜேபிக்கு எதிரான போராட்டம். அதனால் நாங்கள் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம்.” என தெரிவித்தார்.

..உங்கள் பீமா