21-2-22/12.20pm
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் நேற்று தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற்றார். அதில் அந்த பெண் நிருபர் திருமாவின் மனம்கோணாத அளவில் கேள்வியெழுப்ப திருமாவும் பூசிமெழுகியபடியே பதிலளித்தார்.
தமிழக பிஜேபி தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தடாலடியான கேள்விகளை எழுப்பிய அந்த பெண் நிருபர் திருமாவளவனிடம் பம்மியபடி கேள்வியெழுப்பியது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடந்ததா என்ற கேள்விக்கு “27 நகராட்சிகளில் பார்வையிட்டிருக்கிறேன்.
எல்லா நகராட்சிகளிலும் தேர்தல் நியாயமாக நேர்மையாக நடந்தது. எங்குமே பணப்பட்டுவாடா நடக்கவில்லை. அடிதடி போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. சென்னையில் இரண்டு இடங்களில் சில சம்பவங்கள் நடந்ததாக கூறிக்கொள்கிறார்கள்” என பூசி மெழுகினார். அதையடுத்து வாக்குப்பதிவு சதவிகிதம் 70 லிருந்து 60 ஆக குறைந்தது பற்றி வினா எழுப்பப்பட்டது.
அதற்க்கு பதிலளித்த திருமா ” பொதுவாக வாக்கு சதவிகிதம் கூடினால் ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலைமை என கூறுவார்கள். ஆனால் குறைந்திருப்பது ஆளும்கட்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது” என மக்கள் அசர்ந்து போகும் வகையில் பதிலளித்தார்.
கூட்டணிபற்றி பதிலளித்த திருமா “தனியாக நாங்கள் நிற்பதால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை. அம்பேத்கார் புகைப்படம் வைத்த வேறு யாரையாவது கூட்டணியில் வைத்துக்கொள்வார்கள். அது எங்களுக்கே நஷ்டம்.அவர்களுக்கு திருமாவளவன் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்கிற கட்டாயம் இல்லை. எனக்குத்தான் தேவை இருக்கிறது ” என கூட்டணிக்கு புதுவிளக்கம் கொடுத்து பார்வையாளர்களை அசத்தினார்.
விசிக வன்னியரசு மற்றும் விசிக கட்சியினர் திருமாவளவனை முதலமைச்சராக்கி அழகு பார்க்க நினைக்கையில் ஒரு சில சீட்டுக்காக திருமா விட்டுக்கொடுத்து போவது விசிகவினரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
…..உங்கள் பீமா