Thursday, March 28, 2024
Home > செய்திகள் > மேற்குவங்கத்தில் உச்சகட்ட பதட்டம்..! இரு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை..!

மேற்குவங்கத்தில் உச்சகட்ட பதட்டம்..! இரு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை..!

14-3-22/15.24pm

மேற்குவங்கம் : மமதா தலைமையிலான மேற்குவங்க அரசு சட்டம் ஒழுங்கை காப்பற்றாமல் சமூக விரோதிகளுக்கு துணைபோவதாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் சுடசுட ஜெயித்த கவுன்சிலர்கள் இருவர் சூடாக கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனிஹாடி நகராட்சி கிழக்கு பர்ஹனாஸ் 24 மாவட்டத்தை சேர்ந்தவர் அனுபம் தத்தா. இவர் வார்டு எண் 8ல் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அருகில் நின்று சுட்டுக்கொன்றனர். மேலும் இதேபோல புருலியா மாவட்டம் ஜாலடா நகராட்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற டபான் ஹாண்டூ பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவரை மீட்டு ராஞ்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

`

திரிணமூல் தலைவர்களில் ஒருவரான பார்த்தா பௌமிக் கூறினார் “பிஜேபி உள்ளூர் எம்பியான அர்ஜுன் சிங் இந்த தாக்குதல் சதிக்கு பின்னணியாக உள்ளார். நாங்கள் எங்களை ஒருவரை இழந்துவிட்டோம்” என கூறினார். இதற்கு பதிலளித்த பிஜேபி செய்தித்தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா “இது உட்கட்சிப்பூசலால் ஏற்பட்ட கொலை. டி.எம்.சி.வென்றுள்ள அந்த பனிஹாட்டி நகராட்சியில் பிஜேபி போட்டியிடவே இல்லை. இது பொய்யான குற்றசாட்டு” என தெரிவித்துள்ளார்.

```
```

மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆதிர் சௌத்திரி “ஜாலடாவில் காங்கிரஸ் வளர்வது டி.எம்.சிக்கு பிடிக்கவில்லை. அதனால் தனது குண்டர்களை ஏவி தபானை கொன்றுள்ளது” என கூறியுள்ளார். மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் கேரளாபோல பெருகிவருவது ஜனநாயகத்திற்கு விடப்படும் பெரும் சவால் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா